வெளியானது #Babyjohn படத்தின் டீசர் – இணையத்தில் வைரல்!

அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள “பேபி ஜான்” படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘தெறி’. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி…

BabyJohntrailer ,BabyJohn ,varundhawan ,KeerthySuresh ,hindimovie ,cinemanews

அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள “பேபி ஜான்” படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2016ம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘தெறி’. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்தியில் தற்போது ‘பேபி ஜான்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. அட்லி மற்றும் அவரது மனைவி பிரியாவின் ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் முராத் கெதானியின் சினி-1 ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து ‘பேபி ஜான்’ திரைப்படத்தை தயாரித்துள்ளன.

அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் விஜய் நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கிறார். நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : “வாழ்க வசவாளர்கள்” – தவெக தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் #MKStalin

இந்த திரைப்படம் மே 31-ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில பணிகள் முடியாத காரணத்தால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதையடுத்து ‘பேபி ஜான்’ திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு அடுத்த மாதம் 25 -ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.