கருவுற்ற பூனைகளுக்கு சீர்வரிசையுடன் வளைகாப்பு நிகழ்ச்சி!

கோவையில் கருவுற்ற இரண்டு பூனைகளுக்கு சீர்வரிசையுடன் அதன் உரிமையாளர்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்த உமா மகேஸ்வரன் – சுபா தம்பதியினர், தங்கள் வீட்டில் 2 ப்ரிஸியன்…

கோவையில் கருவுற்ற இரண்டு பூனைகளுக்கு சீர்வரிசையுடன் அதன் உரிமையாளர்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்த உமா மகேஸ்வரன் – சுபா தம்பதியினர், தங்கள் வீட்டில் 2 ப்ரிஸியன் இன பூனைகளை வளர்த்து வருகின்றனர். ஜீரா மற்றும் ஐரிஸ் என பெயரிடப்பட்டுள்ள அந்த பெண் பூனைகள் இரண்டும் கருவுற்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பூனைகளுக்கு வளைகாப்பு செய்ய உமா மகேஷ்வரன் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

அதன்படி, தனியார் மருத்துவமனையில் ஒரு அறை அலங்கரிக்கப்பட்டு இரண்டு பூனைகளுக்கும் வளைகாப்பு நடைபெற்றது. சீர் வரிசையாக தேன்மிட்டாய், கடலை மிட்டாய், பழங்கள், பிஸ்கட்டுகள், செல்லப் பிராணிகளுக்கான சாக்லேட்டுகள் வைத்து சடங்குகள் செய்யப்பட்டன. குடும்பத்தில் ஒருவரைப் போன்று பூனைகள் வளர்க்கப்பட்டு வருவதால், வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.