ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு என்ன ஆனது: டிடிவி தினகரன் கேள்வி

காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை அமைச்சர்களோ, அதிகாரிகளோ இதுவரை பார்வையிடாதது ஏன் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் பெய்த மழை பாதிப்பு…

காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை அமைச்சர்களோ, அதிகாரிகளோ இதுவரை பார்வையிடாதது ஏன் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் பெய்த மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அப்போது அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு என்ன ஆனது என டிவிட்டர் பதிவில் அவர் கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டதா? எனவும் அரசுக்கு வினா எழுப்பியுள்ளார்.

தற்போது, நெற்கதிர் முற்றி வரும் நேரத்தில் டெல்டா பகுதியில் பெய்த திடீர் மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் பாழாகி உள்ள நிலையில், இதற்காவது அரசு ஏதாவது செய்யுமா? என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து தேவையான இழப்பீட்டை பெறவேண்டும் என பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், பெயரளவுக்கு “தான் டெல்டாவைச் சேர்ந்தவன்” என்று சொல்லியே முதலமைச்சர் காவிரி பாசன விவசாயிகளை ஏமாற்றப் போகிறாரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

https://twitter.com/TTVDhinakaran/status/1477826588834033667

https://twitter.com/TTVDhinakaran/status/1477826590675374081

https://twitter.com/TTVDhinakaran/status/1477826593011613696

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.