நெல்லை மாவட்டம் பணகுடி அருகே இளவட்டக்கல் தூக்கும் போட்டிக்கு இளைஞர்கள் மற்றும் பெண்கள் தீவிர பயிற்சி செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான இளவட்ட கல் தூக்கும் போட்டியை நடத்தும் வழக்கம் தென்மாவட்டங்களில் பல்வேறு கிராமங்களில் தற்போதும் கடைபிடிக்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி, பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் இந்த போட்டிக்காக, நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள வடலிவிளை கிராம இளைஞர்கள் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர்.
எந்தப்பிடிப்பும் இல்லாமல், கைக்கு அகப்படாத உருளை வடிவத்தில் இருக்கும் இந்த கல்லை தூக்குவதற்கு, இளைஞர்களுடன், இளம் பெண்களும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். உடல்பலத்தை வெளிப்படுத்தும் இந்த போட்டியில் அசத்த தயாராக இருப்பதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.