கல்லூரி மாணவனை உயிரிழப்புக்கு தூண்டிய பப்ஜி

பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகிய கல்லூரி மாணவன் தூக்கு மாட்டி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை, அம்மன் கோவில் தெரு சேர்ந்தவர்…

பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகிய கல்லூரி மாணவன் தூக்கு மாட்டி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை, அம்மன் கோவில் தெரு சேர்ந்தவர் ராகவன். இவர் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகின்றனர். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது மகன் அருண்குமார் கிண்டியில் உள்ள State Institute of Commerce கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், அருண்குமார் கடந்த 3 வருடங்களாக பப்ஜி விளையாடி வந்துள்ளார். மேலும், கடந்த ஒரு வாரமாக கல்லூரி போகாமல், பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகிய அருண்குமார் எந்த நேரமும் விளையாடிகொண்டே இருந்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC அழைப்பு’

இந்நிலையில், அருண்குமாரின் தாய் மற்றும் தந்தை வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது, கல்லூரி சென்று திரும்பிய அருண் குமாரின் சகோதர் கதவு பூட்டியதை கண்டு அதிர்ச்சியடைந்து, ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார். அப்போது, அருண்குமார் தூக்கில் தொங்கியபடி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த சகோதர் கத்தி அக்கம் பக்கம் இருப்பவர்களை அழைத்துள்ளார். பின்னர் அங்கு வந்த பீர்க்கன்காரணை போலீசார் அவரது உடல் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அருண்குமார் தூக்கில் தொங்கும் முன்பு வரை பப்ஜி விளையாடி இருந்ததாகவும், இறந்தபிறகும் கூட பப்ஜி விளையாட்டு தொடர்பாக மெசேஜ் வந்துகொண்டு இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.