கேரள மாநிலம் சபரிமலையில் தீயினால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க ஐய்யப்ப
பக்தர்கள் சமையல் செய்ய தடை ,சிறப்பு அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலையில் நடப்பாண்டு மண்டல சீசன் கடந்த மாதம் 27-ம் தேதியுடன்
நிறைவடைந்தது. அதை தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் 30-ம் தேதி மாலையில் நடை திறக்கப்பட்டு வருகிற 14-ம் தேதி மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நடக்கிறது.
இதையொட்டி சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனத்திற்கு வருகிற ஆயிரம் பக்தர்கள் தவிர, உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு வசதியை பயன்படுத்தி ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். இதனால் கடந்த 4 நாட் களில் 4 லட்சத்திற்கும் மேற் பட்டபக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்து உள்ளனர்.
இந்த நிலையில் அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகியஇடங்களில் பக் தர்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்க சபரிமலையில் கூடுதல் மாவட்டமாஜிஸ்திரேட்டு விஷ்ணு ராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 11ம்தேதி முதல் சபரிமலைக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர்
மகரவிளக்கு பூஜை நிறைவு பெற்ற பின்னரே சன்னிதானத்த்தை விட்டு ஊருக்கு திரும்புவார்கள். எனவே சன்னிதானத்தில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும், அதை சமாளிக்க தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தவும், தீயினால் ஏற்படும் விபத்தை தடுக்க சமையல் செய்யவும், சமையல் செய்ய பயன்படுத்தும் பாத்திரங்கள் சன்னி தானத்திற்கு கொண்டு செல்லவும் தடை விதிக்கபட்டுள்ளது.







