அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா! எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா குழு நிர்வாகிகள் அழைப்பிதழ் வழங்கினர். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா குழு நிர்வாகிகள் அழைப்பிதழ் வழங்கினர்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல்  பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில்,  கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.  இதுதவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.  அரசியல் கட்சி தலைவர்கள்,  இந்து மத தலைவர்களை தவிர,  பாலிவுட்டிலிருந்து கோலிவுட் வரை பல முக்கிய நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  எதிர்கட்சித்தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை,  சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (1.1.2024 திங்கட் கிழமை) நேரில் சந்தித்து, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழை, விழா குழுவினர் வழங்கியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.