அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை – நேற்று பிறந்த குழந்தைகளுக்கு ராமர், சீதா பெயர்கள்….

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளில் ஒடிசாவில் பிறந்த குழந்தைகளுக்கு ராமர், சீதா எனப் பெயர் சூட்டியுள்ளனர்.  பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து…

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளில் ஒடிசாவில் பிறந்த குழந்தைகளுக்கு ராமர், சீதா எனப் பெயர் சூட்டியுள்ளனர். 

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல்  பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில்,  கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை நேற்று (ஜன.22)  பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார்.  இந்த விழாவில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள்,  பிரமுகர்கள்,  நடிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஒடிசாவில் பிறந்த குழந்தைக்கு 21 நாள் கழித்தே பெயர் சூட்டுவது வழக்கம்.  இந்த நிலையில் நேற்று (ஜன. 22) கேந்திரபாரா,  ஜகத்சிங்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு சார்ந்த மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் ஆண், பெண் என மொத்தம் 6 குழந்தைகள் பிறந்தன.

இதையும் படியுங்ள்: ராகுல்காந்தியின் ‘இந்திய நீதிப் பயணம்‘ – அசாம் மாநிலத்தில் தடுத்து நிறுத்தம்!

ஆண் குழந்தைகளுக்கு ராமர் என்றும் பெண் குழந்தைகளுக்கு சீதா என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.  பிரியங்கா மல்லிக்(24) என்பவருக்கு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே பெண் குழந்தையைப் பிறந்துள்ளது.  அந்த குழந்தைக்கும் சீதா எனப் பெயர் சூட்டினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.