2023-2024 கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் விருது வழங்கிச் சிறப்பிக்கும் கல்விவிருது விழாவின் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வருடம் 2022 -2023 கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 5000 பேருக்கு காலை மற்றும் மதிய உணவு மற்றும் வெளியூரில் இருந்து வரும் மாணவர்களும் பெற்றோர்களும் தங்குவதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் 2வது ஆண்டாக, இந்த ஆண்டும் 2023 -2024 கல்வியாண்டில் தொகுதிவாரியாக முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டும் வகையில் கல்வி விருது விழா நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது பிறந்தநாளுக்கு முன்னரே (ஜுன் 22) இந்த விழாவை நடத்த வேண்டும் என கட்சி நிர்வாகிகளிடம் விஜய் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனென்றால் தேர்தலுக்கு பின் கட்சி பணிகளை தொடங்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.







