வள்ளியூர் சுந்தரபரிபூரண பெருமாள் கோயிலில் ஆவணி தேரோட்டத் திருவிழா வெகுவிமரிசையாக இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நெல்லை மாவட்டம், வள்ளியூர் சுந்தரபரிபூரண பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் தேரோட்டத் திருவிழா நடைபெறும். அதேபோல் இந்தாண்டும் கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் சிறப்பு பூஜைகளும், குடமுழுக்குகளும் நடைபெற்றன. பின் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து 10-வது இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோபாலா என்ற கோஷங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதனை கோயில் நிர்வாகத்தினர், பெருமாள் பக்தர்கள் குழு, மண்டகபடிதாரர்கள் செய்து சிறப்பித்தனர்.
அனகா காளமேகன்






