முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆட்டோ கட்டணம் மறு நிர்ணயம்-அரசுக்கு பரிந்துரை

ஆட்டோ கட்டணத்தை மறு நிர்ணயம் செய்வதற்காக கட்டணங்களை மாற்றியமைத்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டில் வாடகை ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணமாக ரூ.25 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி குழுவும் அமைக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கருத்துக்களை கேட்டுள்ள இணை போக்குவரத்து ஆணையர் தலைமையிலான குழு போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆட்டோவிற்கு முதல் 1.5 கிமீ தொலைவிற்கு கட்டணமாக ரூ.40, கூடுதலான ஒரு கிமீ ரூ.18 உயர்த்தலாம் என குழு பரிந்துரை செய்துள்ளது.

கருத்து கேட்கப்பட்ட போது பொதுமக்கள் தரப்பில் குறைந்தபட்சமாக ரூ.30, கூடுதல் கி.மீ ஒன்றுக்கு ரூ 15 வசூலிக்கலாம் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: பள்ளி மாணவிகளுக்கு திருமணம்; கே.பாலகிருஷ்ணன் வேதனை

ஆட்டோ தொழிற்சங்கங்கள் குறைந்தபட்சம் ரூ.50, கூடுதல் ஒரு கிமீக்கு ரூ.25 வசூலிக்க வேண்டும். அரசு சார்பில் அலைபேசி செயலி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர். கட்டணம் குறித்த இறுதி முடிவை அரசு எடுக்கும் என அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜினாமா!

Gayathri Venkatesan

உ.பி.யில் உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு!

Gayathri Venkatesan

புதுவகை கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம்: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

Saravana