முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜெர்மன், பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகளை கற்க விருப்பமா?

ஜெர்மன், பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகளை கற்க வரும் ஜூலை 27 வரை நேரில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகளுக்கான மையம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் பயிலும் மாணவர்கள் மற்றும் Ph.D., பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஜூலை 29 முதல் வகுப்புகள் தொடங்கும். வாரத்துக்கு 3 நாட்கள் மாலை வேளைகளில் மட்டும் வகுப்புகள் நடைபெறும். சான்றிதழ் படிப்பாக நடத்தப்படும் அந்நிய மொழிகள் படிப்புகளில் சேர ரூ.6,500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள மாணவர்கள் “The Director, Centre for International Relations, Anna University, Chennai – 600025 என்ற பெயரில் ரூ.6,500-க்கு வரைவோலை எடுத்து விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 044-22358561 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.

  • நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram