”ஆஸ்திரேலியத் தொடர் தேவையற்றது” – பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கருத்து..!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்திய அணியின் முடிவை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள…

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்திய அணியின் முடிவை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை  2023 கிரிக்கெட் தொடரின் அட்டவணையை, ஐசிசி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இதுவரையில் இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து தான் உலகக் கோப்பை தொடரை நடத்தியுள்ளது. ஆனால் முதல் முறையாக இந்தியா தனியாக உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது.

தொடக்க போட்டியில் அக்டோபர் 5-ம் தேதி, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது. அதே போல போட்டியை நடத்தும் இந்தியா, அக்டோபர் 8-ம் தேதி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

இந்நிலையில் உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியாவுடன் ஆஸி. அணி ஒருநாள் தொடரில் மோதுகிறது. இதில் முக்கியமான வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளார்கள். காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரில் முக்கிய வீரர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. செப்.22, 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது.இந்த போட்டிகளில் கலந்துகொள்வதற்கான ஆஸ்திரேலிய அணியை அண்மையில் அறிவித்தது. அதேபோல் நேற்று இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா முதல் கட்டமாக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி வரும் 22 ஆம் தேதி மொஹாலியில் தொடங்குகிறது. 2ஆவது ஒரு நாள் போட்டி இந்தூரிலும், 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ராஜ்கோட்டிலும் நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்திய அணிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசீம் அக்ரம் எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளார். “உலகக்கோப்பைக்கு முன்னதாக, இந்தியா ஆஸ்திரேலியாவுடன் விளையாடுவது என்பது தேவையற்றது. இந்திய வீரர்களுக்கு இது கூடுதல் சோர்வை தரும். ஆகஸ்ட்டில் இருந்து இந்திய அணி தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வருகிறது. உலகக்கோப்பைக்கும் ஆஸ்திரேலிய தொடருக்கும் இடையே இந்திய வீரர்களுக்கு சிறிது நேரமே ஓய்வு எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

எனவேதான் ஆஸ்திரேலியே தொடரில் இந்திய அணி பங்கேற்பது சிறந்ததாக அமையாது. உலகக்கோப்பை ஆட்டங்களில் விளையாட இந்திய அணி வெவ்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். பயணம் செய்யவே ஒருநாள் ஆகிவிடும். இதனால் உலகக்கோப்பையில் பங்கேற்ப ஆற்றலுடன் இருப்பது முக்கியம். இப்படியான சூழலில் ஆஸ்திரேலியாவுடன் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது ஏன் எனத் தெரியவில்லை” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.