பெங்களூருவில் பாகிஸ்தானின் பந்துவீச்சை நாலா பக்கமும் பறக்கவிட்ட மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர் இணையின் புதிய சாதனை படைத்துள்ளனர்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக இரண்டாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பை குவித்தனர் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஸ் இணை. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஸ் இணை, 203 பந்துகளில் 259 ரன்கள் குவித்து அபாரமாக ஆடியது.
இதில் டேவிட் வார்னர் 85 பந்துகளில் சதமும், மிட்செல் மார்ஸ் 100 பந்துகளில் சதமும் விளாசினர். இருவரும் சேர்ந்து தொடக்க பார்ட்னர்ஷிப்பாக 203 பந்துகளில் 259 ரன்கள் குவித்ததன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக இரண்டாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோரை பதிவு செய்து அசத்தினர்.
இதற்கு முன்னதாக 2015 இல் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் இணை குவித்த இரண்டாவது விக்கெட்டுக்கான 260 ரன்கள் பார்ட்னர்ஷிப்பே ஆஸ்திரேலிய அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும். இந்த நிலையில், தற்போது இந்திய மண்ணில் இருவருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான மிட்செல் மார்ஸ், டேவிட் வார்னரின் 259 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஆஸியின் இரண்டாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகவும், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் ஆஸ்திரேலியாவுக்கான அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகவும் உறுவெடுத்துள்ளது.
மூன்றாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் 2003 ஆம் ஆண்டு ரிக்கி பாண்டிங், டேமியன் மிர்டின் இடையேயான 234 ரன்கள் பார்ட்னர்ஷிப் என்பது குறிப்பிடத்தக்கது.







