முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஆஸி.சுழல் லியான் அசத்தல் சாதனை: எலைட் லிஸ்டில் இணைந்தார்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழல்பந்துவீச்சாளர் நாதன் லியான் 400 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேனில் நடந்தது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி, 147 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி, தனது முதல் இன்னிங்ஸில், 425 ரன்கள் குவித்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் 297 ரன்களில் இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு இலக்கை வென்று 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
இந்தப் போட்டியில் சத்தமில்லாமல் சாதனை படைத்திருக்கிறார், ஆஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர் நாதன் லியான்.

இந்த தொடரில் இங்கிலாந்து வீரர் டேவில் மலானின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 400 விக்கெட் வீழ்த்தி அவர் சாதனை படைத்துள்ளார். 101 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள அவர், இந்த சாதனையை படைத்துள்ளார். ஷேன் வார்ன், கிளன் மெக்ராத் ஆகியோரை அடுத்து 400 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். இதன் மூலம் 400 விக்கெட் என்ற எலைட் லிஸ்டில் இணைந்துள்ளார்.

இதையடுத்து லியானுக்கு ஆஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர் ஷேன் வார்ன் உட்பட பல வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சர்வதேச அளவில் 400 விக்கெட் வீழ்த்திய 17 வது வீரர் என்ற சிறப்பையும் நான்காவது ஆஃப் ஸ்பின்னர் என்ற சிறப்பையும் நாதன் லியான் பெற்றுள்ளார்.

முத்தையா முரளிதரன் (800 விக்கெட், 133 போட்டி), அஸ்வின் (427 விக்கெட், 81 போட்டி), ஹர்பஜன் சிங் (103 போட்டி, 417 விக்கெட்) ஆகியோர் அவருக்கு முன் இருக்கின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

ஒரே நாளில் 11, 416 மெட்ரிக் டன் காய்கறிகள் விநியோகம்!

Halley Karthik

தொடங்கியது சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி

Ezhilarasan

பள்ளி மாணவி தற்கொலை முயற்சி

Saravana Kumar