முக்கியச் செய்திகள் உலகம் தமிழகம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை கொலை செய்ய முயற்சி?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை கொலை செய்ய முயற்சி நடப்பதாக ஆளுங்கட்சி முன்னாள் அமைச்சர் ஃபைசல் வாவ்தா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெறும் நிலையில் 3-ந் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தநிலையில், இம்ரான்கான் அரசுக்கு ஆதரவளித்து வந்த எம்.கியூ.எம் கட்சியும் தனது ஆதரவை விலக்கி கொண்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எனவே நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பே இம்ரான்கான் அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மையை இழந்துள்ளதால், இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இது குறித்து பேசிய ஆளுங்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஃபைசல் வாவ்தா, இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். அவரை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram