முகக்கவசம் அணிய அறிவுறுத்திய மருத்துவரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிகப்படியான பாதிப்புகள் கேரளா, மகாராஷ்டிராவில் பதிவாகி வருகிறது. கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கேரளா மாநிலம் பாறசாலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வந்த இளைஞர் முகக் கவசம் அணியவில்லை என கூறப்படுகிறது. அவரை முகக்கவசம் அணியுமாறு பணியில் இருந்த மருத்துவர் சஞ்சு வலியுறுத்தியுள்ளார்.
இதனால் அந்த இளைஞருக்கும் மருத்துவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இளைஞருடன் வந்த ஆறுபேர் கொண்ட கும்பல் மருத்துவரையும் தடுக்க வந்த மருத்துவமனை காவலர்களையும் தாக்கியுள்ளனர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் பாறசாலை போலீசார் 4 பேரினை கைது செய்துள்ளன்ர். மேலும் இருவரை தேடி வருகினறனர்.







