மதுரை மகபூப்பாளையம் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து வங்கி ஏடிஎம்களில் நிரப்புவதற்கு எடுத்துச் செல்லப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என கூறி தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. மேலும் தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து, சட்டவிரோதமாக ரூ.50,000 மேல் கொண்டு செல்லப்படும் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், மதுரை மகபூப் பாளையம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து வங்கி ஏடிஎம்களில் நிரப்புவதற்கு 1.75 கோடி ரூபாய் எடுத்துச் செல்லப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என கூறி தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றன.







