சென்னையில் வாடிக்கையாளர் பணம் எடுக்க வந்தபோது எஸ்.பி.ஐ. ஏ.டி.எம் இயந்திரம் திறந்ததிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை, விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்.பி.ஐ.ஏ.டி.எம்
இயந்திரம் திறந்து கிடப்பதாக நேற்று இரவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு
வாடிக்கையாளர் தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் கோயம்பேடு போலீசார் மற்றும் வங்கி ஊழியர் அங்கு சென்று பார்த்தபோது ஏடிஎம் இயந்திரம் திறந்த நிலையில் இருந்துள்ளது.
இயந்திரத்தில் எதுவும் பணம் உள்ளதா என்பதை பார்த்த போது அதில்
பணம் எதுவும் இல்லை. இது குறித்து பணம் நிரப்பும் ஏஜென்சியிடம் கேட்டபோது
மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால் ஏ.டி.எம். இயந்திரம் இருக்கும் கட்டிடம்
இடிக்கப்படுகிறது. அதன் காரணமாக அதில் இருந்த அனைத்து பணமும் ஏற்கனவே
எடுத்துவிட்டதாகவும், அதன் பின் அந்த இயந்திரத்தை மூடவில்லை எனவும்
கூறப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம் இயந்திரம்
திடீரென திறந்திருந்த்தைக் கண்டதால் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
-ம.பவித்ரா








