நெதர்லாந்தில் உள்ள Rotterdam நகரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் சூரி நடிப்பில் உருவான இரண்டு படங்கள் திரையிடப்படவுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக நடித்து வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக ஆக்கினார். அந்த படத்தை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து சூரி தொடர்ந்து கதாநாயகனாகவே சில படங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே நிவின் பாலி நடித்து ராம் இயக்கியிருக்கும் ஏழு கடல் ஏழு மலை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். தொடர்ந்து விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்களை முடித்த சூரி அடுத்து நடிக்கும் கருடன் படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்குகிறார். இந்த படத்துக்குக் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார்.
https://twitter.com/sooriofficial/status/1752252824405029157
தற்போது சூரி நெதர்லாந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் நடித்துள்ள விடுதலை மற்றும் ஏழு கடல் ஏழு மலை ஆகிய இரு படங்கள் Rotterdam நகரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட சர்வதேச ரோட்டர்ட்டாம் திரைப்பட விழாவில் திரையிடப் பட இருப்பதால் இந்த பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.







