பந்தலுாரில் செந்தில் என்பவர் வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை இரவு நேரத்தில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் மலர்கள் ஒரே செடியில் 15-க்கும் மேற்பட்ட பூக்கள் பூத்துள்ளன. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே கொளப்பள்ளி கிராமத்தில் வசித்து வரும் செந்தில்குமார் என்பவர் வீட்டில் பிரம்ம கமலம் செடியை வளர்த்து வந்தார். ஆண்டுக்கு ஒரு முறை இரவு நேரத்தில் மட்டுமே பூக்கக்கூடிய பிரம்ம கமலம் மலர்கள் பூக்க துவங்கியது. ஒரு செடியில் 15-க்கும் மேற்பட்ட பூக்கள் பூத்துக்குலுங்கியது.
இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரித்துடன் பார்த்து, ரசித்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர். இந்த மலர்கள் பல வண்ணங்களில் பூக்கும். ஆனால் தற்போது இந்த மலர் வெள்ளை நிறத்தில் பூத்துள்ளதால் தங்கள் கிராமத்திற்கு நல்லது நடக்கும் என கருதி சிலர் அந்த பூக்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளனர்.
—அனகா காளமேகன்







