மதுரை விமான நிலையத்தில் ரூ. 59  லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!

சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த பயணியிடமிருந்து  சுமார் ரூ. 59  லட்சம் மதிப்பிலான 995.4 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.   மதுரை விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக விமான…

சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த பயணியிடமிருந்து  சுமார் ரூ. 59  லட்சம் மதிப்பிலான 995.4 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  
மதுரை விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில்
தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய சங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினருக்கு
ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது  சிங்கப்பூர் பயணி ஒருவரிடம்
பேஸ்ட் வடிவிலான 59,28,210 லட்சம் ரூபாய் மதிப்பிலான 995.4 கிராம் தங்கம்
மறைத்து வைத்துக் கொண்டு வந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து  கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலக்கா நுண்ணறிவு
பிரிவினர் பயனியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.