2023-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என்று ஐஎம்எப் தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச அளவில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக உள்ளது எனவும் ஐஎம்எப் கணித்துள்ளது.
சர்வதேச நிதியம் எனப்படும் ஐஎம்எப் உலக பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்புகளை வெளியிட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருந்தது. 2023-ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக குறையும் என ஐஎம்எப் கணித்துள்ளது. மேலும், 2024-ம் நிதியாண்டில் 6.8 சதவீதமாக வளர்ச்சியடையும் என குறிப்பிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2023-ம் நிதியாண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 2.9 சதவீதமாக குறையும் என ஐஎம்எப் குறிப்பிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 3.4 சதவீதமாக உள்ளது. ஆனால் 2024-ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மீண்டும் அதிகரித்து 3.1 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது.
வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளிலும் ஆசிய அளவில் இந்தியா மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக உள்ளது என ஐஎம்எப் குறிப்பிட்டுள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி 20230-ம் நிதியாண்டில் 5.2 சதவீதமாக இருக்கும் எனவும் வருகிற 2024-ம் நிதியாண்டில் சீனாவின் பொருளாதார வளரச்சி 4.5 சதவீதமாக குறையும் எனவும் ஐஎம்எப் குறிப்பிட்டுள்ளது.