ஜூன் 2-வது வாரம் சட்டப் பேரவை கூட்டத் தொடர்?

மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப் பேரவை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி…

மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப் பேரவை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி நடைபெற்றது.  இந்த சட்டசபையில் 2024-2025ம் ஆண்டுக்கான பட்ஜெட்டும், வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன.  இதன் மீது நடைபெற்ற விவாதங்களுக்கும் அமைச்சர்கள் பதிலளித்தனர். இதில் சில சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.

அதன் பிறகு சட்டசபை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.  இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற காரணத்தால் சட்டசபையை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.  இதனால் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறாமல் இருந்தது.

இதனையடுத்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால்,  ஜூன் 2 வது வாரத்தில் சட்டசபை கூட்டத்தை அரசு நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.