முக்கியச் செய்திகள் தமிழகம்

தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்: கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நியூஸ் 7 தமிழுக்கு இன்று பிரத்யேக பேட்டியளித்தார். சசிகலாவை தமிழக மக்களின் மிகப்பெரிய தலைவர் என்று கூற முடியாது எனக் குறிப்பிட்ட அவர், ஊழல் வழக்கில் தண்டனை அனுபவித்து சசிகலா வெளியே வருகிறார், வெளியே வருவதை கோலாகலமாக கொண்டாட வேண்டிய அளவிற்கு தமிழகத்தின் நிலைமை மோசமாக இருப்பது தான் வருத்தமாக இருக்கிறது, இது தமிழக அரசியல் மற்றும் கட்சிகளிடையே எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறினார்.

மேலும், திமுக கூட்டணி தமிழகத்தில் வலுவாக உள்ளதாகவும், இந்த தேர்தலை இணைந்து தான் சந்திக்க உள்ளோம் என்றும், இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என ஸ்டாலின் கூறியது போன்றே தொடரும் எனவும் தெரிவித்தார்.

தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பார்த்து இந்த மாதிரி கேள்வி கேட்க எப்படி துணிவு வந்தது என்று தெரியவில்லை. எந்த சூழ்நிலையிலும் மார்க்சிஸ்டாக இருக்கும் நாங்கள் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என அதிரடியாக பதிலளித்தார் பாலகிருஷ்ணன்.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா தடுப்பூசிக்கு பதில் ரேபிஸ் தடுப்பூசி! உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!!

Ezhilarasan

தந்தையிடமிருந்து பணத்தை திருடிய 13 வயது சிறுவன்!

Jeba Arul Robinson

’வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய்’: முதல்வர் அன்னையர் தின வாழ்த்து

Halley karthi

Leave a Reply