அசாமில் உலக சாதனையாக ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாச சர்மா தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் இந்த இயக்கத்தை முன்னெடுத்தனர்.
மரக்கன்றுகளை தோட்டங்களிலும், வீடுகளிலும் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது நடப்படும் மரக்கன்றுகள் பொதுமக்களால் பராமரிக்கப்பட்டு பசுமை பெருகும் என்ற நம்பிக்கை உள்ளதாக அசாம் முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.







