கமல்ஹாசன் நடித்த “பேசும்படம்” மறுவெளியீடு செய்யப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் நடித்த “பேசும்படம்” திரைப்படத்தை 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய இப்படத்தில் அமலா கதாநாயகியாக நடித்துள்ளார். வசனமே இல்லாமல் உருவாகிய பேசும்படம் 1987ம் ஆண்டு வெளியானது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.







