மாதம் ஒரு பீட்சா, தினமும் சேலை, ஷாப்பிங் – ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்த ஜோடி!

மாதம் ஒரு பீட்சா, தினமும் சேலை, ஷாப்பிங் என்று ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்த ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமணம் என்பதை மறக்க முடியாத நிகழ்வாக மாற்ற வேண்டும் என்பதற்காக…

மாதம் ஒரு பீட்சா, தினமும் சேலை, ஷாப்பிங் என்று ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்த ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருமணம் என்பதை மறக்க முடியாத நிகழ்வாக மாற்ற வேண்டும் என்பதற்காக இன்றைய தலைமுறையினர் புதுப்புது ஐடியாக்கள் மூலம் திருமணத்தை நடத்துகின்றனர். அந்த வகையில் பல்வேறு தீம் பேஸுடன் போட்டோ ஷூட் எடுப்பது, போஸ்ட் வெட்டிங் ஷூட், ப்ரீ வெட்டிங் ஷூட், திருமண உணவு வகைகளில் வெரைட்டி காமிப்பது, திருமணத்துக்கு வருபவர்களுக்கு நியாபகார்த்தமாக வித்தியாசமான பரிசுப் பொருள்களை வழங்குவது என பல்வேறு விஷயங்களைச் செய்கின்றனர். அந்த வகையில், அசாமைச் சேர்ந்த ஜோடி ஒன்று ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்து கொண்டது தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

அசாமைச் சேர்ந்தவர்கள் மிண்டு மற்றும் சாந்தி என்ற திருமண ஜோடி. இவர்கள் ஒப்பந்தம் (கான்ட்ராக்ட்) போட்டு திருமணம் செய்துள்ளனர். அப்படி என்னதான் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

  • மாதத்திற்கு ஒரு முறை தான் பீட்சா.
  • கண்டிப்பாக தினந்தோறும் சேலை உடுத்த வேண்டும்.
  • தினமும் ஜிம் செல்ல வேண்டும்.
  • எல்லா பார்ட்டிகளிலும் நல்ல புகைப்படங்களை எடுக்க வேண்டும்.
  • 15 நாள்களுக்கு ஒருமுறை ஷாப்பிங் செல்ல வேண்டும்.
  • இரவு நேர பார்ட்டிகளுக்கு என்னோடு மட்டுமே செல்ல அனுமதி.
  • ஞாயிறு காலை அன்று உணவை கணவர் மட்டுமே சமைக்க வேண்டும்.
  • உணவகங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இந்த 8 ஒப்பந்தத்தில் ஜோடிகள் இருவரும் கையெழுத்திட்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த ஒப்பந்தத்தில் சாட்சி கையெழுத்துகளும் இடம்பெற்றுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திடும் வீடியோவை வெட்லாக் போட்டோகிராபி (wedlock photography) தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதோடு, லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

https://www.instagram.com/s/aGlnaGxpZ2h0OjE3ODg0OTQ0NDQ5NjgyOTc2?story_media_id=2878352700969772695_7164563891&igshid=YmMyMTA2M2Y=

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.