தம்மால் முழுபாடத்திட்டதையும் படிக்க முடியும் என்ற மனஉறுதி உள்ளவர்கள், பயிற்சி மையம் செல்லாமல் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறலாம் என தேர்ச்சி பெற்ற மதிவதணி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் 2022-ஆம் ஆண்டிற்கான குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 33 வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்று தேர்வானவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டி பேசினார். அப்போது உயர்ந்த பதவி என்பது பன்மடங்கு கடமையை உள்ளடக்கியது என்பதே உண்மை. உயர்ந்த இடத்துக்கு நம்மை உயர்த்திய மக்களை நாம் எப்போதும் மறக்கக் கூடாது என அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனையடுத்து பயிற்சி மையம் செல்லாமல் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று தேர்வாகியுள்ள மதிவதணியிடம் நமது இணை ஆசிரியர் தேவா இக்னேசியஸ் சிரில் நடத்திய கலந்துரையாடலை காணலாம்…
மக்களே மேலதிகாரிகள், மக்களுக்காக பணியாறுங்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். 4 ஆவது முறையாக முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளேன். நாள்தோறும் செய்தித்தாள்களை படிக்க வேண்டும், ஒருவருடத்திற்கு முன்னதாக தீவிரமாக முயற்சி செய்தால் போதும். பயிற்சி மையம் அவசியம், அவசியமில்லை என சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்கு தேடல்கள், தேவைகள் இருக்கும். சிவில் சர்வீஸ் தேர்வு பற்றி தெரியாதவர்களுக்கு மையங்கள் ஒரு தளமாக வழிவகுக்கும். தன்னால் பாடத்திட்டத்தை படிக்க முடியும் என்பவர்கள் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். 4 ஆவது முறையாக சொந்த முயற்சியில் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றேன். இவ்வாறு மதிவதணி தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா









