ஆசிய விளையாட்டுப் போட்டி : சாதனை படைத்த இளவேனில் வாலறிவனுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

இந்தியாவுக்காக இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த பதிவில், “ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவுக்காக இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள தமிழகத்தின் வீராங்கனை இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனிநபர் மற்றும் அணிப் பிரிவுகளில் சிறப்பான திறமையையும், விடாமுயற்சியையும் வெளிப்படுத்தி இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ள இளவேனில் அவர்களின் சாதனை தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

இன்னும் பல சர்வதேச அரங்குகளில் வெற்றிகளைப் பெற்று, இந்தியாவின் வெற்றிப் பயணத்திற்கு தொடர்ந்து பெருமை சேர்க்க என் மனமார்ந்த வாழ்த்துகள்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.