கேரளாவில் தொடரும் கனமழை – இதுவரை 6 பேர் உயிரிழப்பு!

கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கேரளாவில் மாநிலம் இடுக்கியில் இரு வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவில் சிக்கி தோட்ட தொழிலாளர்கள் 2 பேர், சுற்றுலாவுக்காக கேரளா சென்ற சென்னை பெண் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நிலச்சரிவு அபாயம் அதிகம் உள்ள அடிமாலி போன்ற பகுதிகளில் வசித்த குடும்பங்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில் நேற்று மதியம் முதல் பெய்த கன மழைக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் மாயமாகியுள்ளனர். மேலும் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.