Asian Champions Trophy Hockey 2024 – கொரியாவை வீழ்த்தி இந்தியா முதலிடம்!

இன்று நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கிப் போட்டியில், நடப்பு சாம்பியன் இந்தியா,  3-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை தோற்கடித்து தொடர்ந்து 4-வது வெற்றியை பதிவு செய்தது.  சீனாவின் ஹூலுன்பியர் நகரில், 8வது…

Asian Champions Trophy Hockey 2024 - India beat Korea to become first!

இன்று நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கிப் போட்டியில், நடப்பு சாம்பியன் இந்தியா,  3-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை தோற்கடித்து தொடர்ந்து 4-வது வெற்றியை பதிவு செய்தது. 

சீனாவின் ஹூலுன்பியர் நகரில், 8வது ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கிப் போட்டி கடந்த செப்.8-ம் தேதி தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா உட்பட 6 நாடுகள் பங்கேற்றன. இந்நிலையில் இந்தியா தனது நான்காவது லீக் ஆட்டத்தில்  3-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை தோற்கடித்து, தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியா, ஏற்கனவே சீனாவை 3-0 என்ற கோல் கணக்கிலும், ஜப்பானை 5-0 என்ற கோல் கணக்கிலும், கடந்த ஆண்டு ரன்னர் அப் மலேசியாவை 8-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது. தொடர்ந்து இன்று தென்கொரியாவை வீழ்த்தி தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன்மூலம் 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. வரும் சனிக்கிழமை கடைசி குரூப் சுற்று போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.