ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் நடப்பு சாம்பியன் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேரியது மலேசிய அணி.
சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. முதல் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தென்கொரியா- மலேசியா அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய மலேசிய அணி 6-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மலேசிய அணி தரப்பில் அஸ்ராய் (3வது நிமிடம்), ஜஸ்லான் (9 மற்றும் 21வது நிமிடம்), சாரி (19வது நிமிடம்), சில்வரியஸ் (47 மற்றும் 48வது நிமிடம்) கோல் அடித்தனர். தென் கொரிய அணியில் ஜி 2வது நிமிடத்திலும், ஜாங் 14வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
இந்நிலையில், ஆசிய கோப்பை ஹாக்கியின் மற்றொரு அரையிறுதி போட்டியில் ஜப்பானுக்கு எதிராக இந்திய அணி களம் கண்டுள்ளது. இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டியில் மலேசிய அணியை எதிர்கொள்ளும்.







