சென்னை ஹாக்கி மைதானத்தின் ஒரு பகுதிக்கு கலைஞர் பெயர்!

சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறும் ஆசிய ஆண்கள் ஹாக்கி கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியுள்ள நிலையில், மைதானத்தின் ஒரு பகுதிக்கு கலைஞர் நூற்றாண்டு பெவிலியன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையில்…

சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறும் ஆசிய ஆண்கள் ஹாக்கி கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியுள்ள நிலையில், மைதானத்தின் ஒரு பகுதிக்கு கலைஞர் நூற்றாண்டு பெவிலியன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சென்னையில் ஆசிய ஆண்கள் ஹாக்கி கோப்பைத் தொடர் 16 ஆண்டுகள் கழித்து நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், கொரியா, மலேசியா ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. 15 லீக் ஆடடம் உள்ளிட்ட 20 ஆட்டங்கள் நடைபெறுகிறது.

15 லீக் போட்டிகள் 5-வது மற்றும் 6வது இடத்திற்கான போட்டிகள், இரண்டு அரையிறுதிப் போட்டிகள், 3-வது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி என மொத்தம் 20 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதற்காக ஆன்லைன் டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியுள்ளது. குறைந்தபட்ச டிக்கெட் விலை 300 ரூபாயாகவும் அதிகபட்சமாக 400 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் ஒரு பகுதிக்கு கலைஞர் நூற்றாண்டு பெவிலியன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.