முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட்; இந்திய மகளிர் அணி அறிவிப்பு

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் வங்காளதேசத்தில் நடைபெற உள்ளது. அந்நாட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அனைத்துப் போட்டிகளும் நடைபெற உள்ளது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் போட்டி அக்டோபர் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மோதுகின்றன. ஆசிய கோப்பைக்கான மகளிர் கிரிக்கெட் டி20 போட்டிக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ஆசிய மகளிர் டி20 போட்டி வரும் அக்டோபர் 1-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில், ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிதொடருக்கான ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மகளிர் அணியில், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், சபினேனி மேகனா, ரிச்சா கோஷ், சினே ராணா, தயாளன் ஹேமலதா, மேகனா சிங், ரேணுகா தாகூர், பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கயக்வாட், ராதா யாதவ், கே.பி. நவ்கிரே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி அக்டோபர் 1ம் தேதி சில்காட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

போக்குவரத்து கழகங்களில் முறையாக பணி செய்யாதவர்கள் மீது நடவடிக்கை – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

EZHILARASAN D

பயோ டீசல் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுவதாக புகார்!

EZHILARASAN D

வெளிநாட்டு மாணவர் சேர்க்கை–வில்சனின் கேள்விக்கு அரசு பதில்

Mohan Dass