17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றில் இன்று நடக்கும் 6-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் இந்திய மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்தியா முதலில் களமிறங்கியது.
இந்திய அணியின் தொடக்க வீரராக களமிரங்கிய அப்ஷேக் சர்மா 31 பந்துகளில் 61 ரன்கள் குவித்து அசத்தினார். தொடர்ந்து திலக் வர்மா 49 ரன்களும் சஞ்சு சாம்சன் 39 ரன்களும் விளாசினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் கணிசமான அளவு அதிகரித்தது.
20 ஓவர் முடிவில் இந்திய அணி 202 ரன்களை குவித்தது. இதனை தொடர்ந்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாட உள்ளது.







