ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இலங்கை, பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டதால், 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 252 ரன்கள் குவித்தது. முகமது ரிஸ்வான் 86, அப்துல்லா ஷபிக் 52, இப்திகார் அகமது 47 ரன்கள் சேர்த்தனர்.
252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. குசால் மெண்டிஸ், சமரவிக்ரமா, அசலங்கா ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் கடைசி பந்தில் இலங்கை அணி வெற்றி இலக்கை எட்டியது. 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
குசால் மெண்டிஸ் 91, அசலங்கா 49, சமரவிக்ரமா 48 ரன்கள் சேர்த்தனர். வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணியை இலங்கை எதிர்கொள்கிறது.







