கிரிக்கெட் சங்கத் தலைவராக அமைச்சர் பொன்முடி மகன் அசோக் சிகாமணி தேர்வு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அப்போது, சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலும் நடைபெற்றது. அதில், தமிழ்நாடு கிரிக்கெட்…

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அப்போது, சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலும் நடைபெற்றது. அதில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக அசோக் சிகாமணி தேர்வு செய்யப்பட்டார். இவர் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் மகன். சங்கத்தின் செயலாளராக பழனி, பொருளாளராக சீனிவாசராவ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அசோக் சிகாமணி தரப்பை எதிர்த்து போட்டியிட்ட பிரபு தலைமையிலான குழுவினர் அனைவரும் வாபஸ் பெற்றதால் அனைத்து உறுப்பினர்களும் போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அசோக் சிகாமணி  ஏற்கனவே  விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர், மாநில கிரிக்கெட் சங்க துணைத் தலைவர்  பொறுப்புகளை வகித்துள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அசோக் சிகாமணி, “இதற்கு முன்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தினை நிர்வகித்தவர்கள் சிறப்பாக பணியை மேற்கொண்டுள்ளனர், நாங்களும் அதே முறையை தான் பின்பற்ற உள்ளோம். நாம் ரஞ்சி கோப்பை வெற்றி பெற்று பல வருடங்கள் ஆகிறது. எனவே ரஞ்சி கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளோம்” என்று தெரிவித்தார்.

எந்த மாநிலத்திலும் இல்லாதது போல கிரிக்கெட் தொடர்களை நடத்துவதில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு மட்டுமே உள்ளது. நான் ஓபன் challenge தருகிறேன். இனி வரும் காலங்களில் மகளிர் கிரிக்கெட்டில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அதிக கவனம் செலுத்தும் என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.