டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு; வேளாண் அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை…

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்தும் கடைமடை வரை…

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்தும் கடைமடை வரை தண்ணீர் சென்றடையாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது குறுவை நெற்பயிர்களுக்கான இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், குறுவை பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.