அதிமுகவின் சட்டவிதிகளின் படி நான் தான் தற்போது வரை ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
குடியரசு தலைவர் பதவிகாலம் முடிவடைய உள்ளதையடுத்து குடியரசு தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18ம் தேதி நடக்க உள்ளது. இதையடுத்து பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு திரட்டுவதற்காக இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார்.
பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு திரட்டுவதற்காக இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் நடந்த இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் ஏராளமான அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆதரவு தெரிவித்துவிட்டு சென்ற பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்முவை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அவருடன்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு அதிமுகவின் இதயபூர்வமான ஆதரவை தெரிவித்துள்ளோம். அதிமுகவின் சட்டவிதிப்படி இன்று வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்று தெரிவித்தார்.







