பல சரித்திர மற்றும் புராணக்கதைகளை சினிமாவுக்கு ஏற்றவாறு மெறுகேற்றி திரைக்கதை அமைத்து படமாக்குவது மணிரத்ணத்தின் பாணி. மகாபாரதத்தின் கர்ணன் கதையை தளபதியாக வடித்தது, கருணாநிதி – எம்.ஜி.ஆரின் நட்பை பட்டி டிங்கரிங் பார்த்து ‘இருவர்’ படத்தை உருவாக்கியது, இராமாயணத்தைக்கொண்டு ‘இராவணன்’-ஐ எடுத்தது என பல்வேறு சாகசங்களை செய்துள்ளார் மணிரத்னம். மேற்சொன்ன படங்களில் தளபதியை தவிர மற்ற இரண்டு படங்களுமே வசூலில் சொதப்பியது.
இந்நிலையில் கல்கியின் புகழ் பெற்ற சரித்திர புணைவுக்கதையான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை வைத்து மணிரத்னம் செய்யும் புதிய சாகசம் தான் ‘பொன்னியின் செல்வன். பல்வேறு திருப்பங்களுடன் பல்வேறு கதாப்பாத்திரங்களையும் நிறைய துணைக்கதைகளையும் கொண்டுள்ள இந்த நாவலை கொண்டு எடுப்படும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ளது.
ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரப்பட்டாளங்கள் இதில் நடிக்கின்றனர். ஒவ்வொரு நடிகர்களும் நடிக்கவிருக்கும் கதாப்பாத்திரங்களை பற்றிய விவரங்களை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது படக்குழு. இந்நிலையில் படத்திற்கான எதிர்ப்பார்ப்பு பல மடங்கு எகிறியிருந்தது. இப்படத்தின் முதல் பாகம் வரும்செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
https://twitter.com/MadrasTalkies_/status/1543119893448404993
கூடிய விரைவில் இப்படத்திற்கான டீஸர் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் வருகிறான் சோழன் என்ற தலைப்போடு டீஸருக்கான ஒரு டீஸர் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. ஏ.ஆர். ரகுமானின் பினனணி இசையுடன் காவிக்கொடி பறக்க வெளியாகியுள்ள வீடியோ இணையத்தில் சுமாராக ட்ரெண்டாகிவருகின்றது.







