நடிகர்கள் ஆர்யா, கௌதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகையான மஞ்சு வாரியர் இணைந்துள்ளார்.
எஃப் ஐ ஆர் படத்தின் மூலம் இயக்குநரான மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்க திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளனர். ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இத்திரைப்படத்தை பிரின்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.
மிஸ்டர்.எக்ஸ் எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில், அசுரன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அசுரன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்துடன் இணைந்து துணிவு திரைப்படத்தில் நடித்தார். இது அவரது மூன்றாவது நேரடி தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.








