அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

அருள்நிதி நடித்துள்ள கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் ஜூன் 23-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான திரைப்படம் “கழுவேத்தி மூர்க்கன்”. துஷாரா விஜயன், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள…

அருள்நிதி நடித்துள்ள கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் ஜூன் 23-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான திரைப்படம் “கழுவேத்தி மூர்க்கன்”. துஷாரா விஜயன், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘ராட்சசி’ படத்தை இயக்குநர் சை.கௌதம்ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார்.

கடந்த மே 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில், அம்பேத்குமார் தயாரித்துள்ளார். சாதியை வைத்து நடக்கும் அரசியலை பேசிய இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

https://twitter.com/PrimeVideoIN/status/1671073948677570560?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1671073948677570560%7Ctwgr%5E5613d80670e20f8149d7f748e523b2936098335d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fcinema%2Fcinema-news%2F2023%2Fjun%2F21%2Fkazhuvethi-moorkkan-arulnidhi-4025210.html

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி வெளியீடு பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி வரும் ஜூன் 23-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் வெளியாகும் என அமேசான் நிறுவனம் தனது அதிகாரபூர்வ பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.