ஆருத்ரா தரிசனம்; பிரசித்தி பெற்ற சிவதலங்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்த பெற்ற சிவலாயங்களில் ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மார்கழி திருவாதிரை நாளில் விரதமிருந்து ஈசனை வழிபட்டு…

தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்த பெற்ற சிவலாயங்களில் ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மார்கழி திருவாதிரை நாளில் விரதமிருந்து ஈசனை வழிபட்டு ஆருத்ரா தரிசனத்தை கண்டு களித்தால் சகலவித சுகபோகங்களும் கிடைக்கப்பெற்று பிறவிப் பிணி நீங்கப் பெறுவார்கள் என்பது ஐதீகம். ஆருத்ரா என்பது திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும் ஆருத்ரா தரிசனமாகும். சேந்தனார் வீட்டுக்கு சிவன் பெருமான் களி உண்ண சென்ற தினம் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் ஆகும். அதனால் இந்த நாளையே ஆருத்ரா தரிசன விழாவாக கொண்டாடப்படுவதாக புராணங்களில் கூறப்படுகிறது.

திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள மஹாவிஷ்ணு தன்னை மறந்து ஆனந்தத்தில் திளைத்திருப்பதைக் கண்டார் ஆதிஷேசன். அதுபற்றி மஹாவிஷ்ணுவிடம் கேட்க, தாருகாவனத்தில் சிவபெருமான் ஆடிய அற்புத நடனம் பற்றி சொல்ல, ஆதிஷேசனுக்கு தானும் அந்த நடனத்தை பார்க்க ஆவல் ஏற்பட்டது.அதற்காக பாதி உடல் மனிதனாகவும் மீதி உடல் பாம்பாகவும் தோன்றி பூவுலகில் தவம் இருந்தார். அவருக்காக சிதம்பரத்தில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்தி நாளில் மீண்டும் அந்த ஆனந்த நடனத்தை சிவபெருமான் ஆடிக்காட்டினார். அந்த நாளே ஆருத்ரா தரிசன நாளாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து சிவதலங்களில் ஆருத்ரா தரிசனம் இன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தலமான சிரதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று ஆருத்ரா தரினத்தையொட்டி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிப்பட்டது.

இதேபோல், ராமேஸ்வரம் காசி விஸ்வநாதன் கோயில், நெல்லை மாவட்டம் நெல்லையப்பர் கோயில், சங்கரன்கோயில் சங்கரநாராயண சுவாமி கோயில், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில், தென்காசி குற்றாலநாதர் கோயில், கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பிரசத்தி பெற்ற சில தலங்களில் ஆருத்ரா தரிசனம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த ஆருத்ரா தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.