அரியர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்!

அரியர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அரியர் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அரியர் மாணவர்களுக்கு…

அரியர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக அரியர் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அரியர் மாணவர்களுக்கு 8 வாரங்களில் தேர்வு நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஆண்டிலிருந்தே, அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி வரும் அண்ணா பல்கலைக்கழகம், தற்போது உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரியர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள இளநிலை மாணவர்களுக்கு ஏற்கனவே அரியர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி முடித்த நிலையில், தற்போது முதுநிலை மாணவர்களுக்கான அரியர் தேர்வு அட்டவணையை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 26-ம் தேதி முதல் முதுநிலை மாணவர்களுக்கான அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.