தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அக்.12 அன்று அறிவிப்பு வெளியிட்டார். புதிய ஆளுநர்கள் தங்களது பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் நாளிலிருந்து இந்த உத்தரவு அமலுக்கு வரும் என குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்தது. இதில், கேரளத்திற்கு முழு நேர ஆளுநராகவும், தமிழ்நாட்டிற்கு பொறுப்பு ஆளுநராகவும் இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டிற்கான முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவருக்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தமிழ்நாட்டின் ஆளுநராகப் பொறுப்பு வகித்து வந்த ஆர்.என். ரவி, கடந்த மார்ச் மாதம் மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, கேரள ஆளுநரான ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர், தமிழ்நாட்டின் கூடுதல் பொறுப்பையும் கவனித்து வந்தார். இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் விஜய் பதவியேற்றபோது, அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததும் அர்லேகர்தான்.
இதையடுத்து தமிழகத்தின் முழுநேர ஆளுநராக அர்லேகர் சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று (அக்.15) பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வின்போது, ஆளுநரின் செயலாளர் சஜ்ஜன்சிங் ஆர். சவான் மற்றும் பிற அதிகாரிகளும் உடனிருந்தனர். அவருக்கு காவல்துறை சிறப்பு அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.




