தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக அர்லேக்கர் நியமனம்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு பொருப்பு ஆளுநராக இருந்து வந்த கேரள ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேக்கர் தற்போது தமிழ்நாட்டிற்கு முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவிற்கு ஓம் பிரகாஷ் மதுர் பிதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

தமிழ்நாட்டின் வளர்ச்சி, மாநில உரிமைகள் மற்றும் தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.