முக்கியச் செய்திகள் இந்தியா

நாடு முழுவதும் 32,095 டன் ஆக்சிஜன் ரயில்கள் மூலம் விநியோகம்!

கொரோனா தொற்றை எதிர்கொள்ள 32,095 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் சிறப்பு ரயில்கள் மூலம் நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியை நெருங்கி வரக்கூடிய நிலையில் தற்போது தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தொற்று பரவல் வேகம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இத்தொற்றைக்கட்டுப்படுத்த நாடு முழுவதும் 32,095 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் சிறப்பு ரயில்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்திற்கு மட்டும் தமிழகத்திற்கு இதுவரை 5,674 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்
செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 1,834 டேங்கர்களில் சுமார் 32,095 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 444 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 14 டேங்கர்களில் சுமார் 258 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் 3 ரயில்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

நாட்டின் தென் மாநிலங்களுக்கு 17,700 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜன், ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்கள் கொண்டு சேர்த்துள்ளன என்றும், தமிழ்நாடு, உத்தராகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, தில்லி, உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், அசாம் ஆகிய 15 மாநிலங்கள் இதுவரை ஆக்சிஜன் பெற்றுள்ளன என்றும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

மொத்தமாக விநியோகிக்கப்பட்ட 32,095 டன் மருத்துவ ஆக்சிஜன் முறையே தமிழகத்திற்கு 5,674 மெட்ரிக் டன், மகாராஷ்டிராவிற்கு 614 மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசத்திற்கு 3797 மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்திற்கு 656 மெட்ரிக் டன், டெல்லிக்கு 5722 மெட்ரிக் டன், ஹரியானாவிற்கு 2354 மெட்ரிக் டன், ராஜஸ்தானிற்கு 98 மெட்ரிக் டன், கர்நாடகாவிற்கு 4227 மெட்ரிக் டன், உத்தராகண்டிற்கு 320 மெட்ரிக் டன், ஆந்திரப் பிரதேசத்திற்கு 4037 மெட்ரிக் டன், பஞ்சாப்பிற்கு 225 மெட்ரிக் டன், கேரளாவிற்கு 513 மெட்ரிக் டன், தெலங்கானாவிற்கு 3255 மெட்ரிக் டன், ஜார்கண்டிற்கு 38 மெட்ரிக் டன், அசாமிற்கு 560 மெட்ரிக் டன் என விநியோகிக்கப்பட்டுள்ளது என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் இதுவரை 3,83,490 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தண்டோராவுக்கு தடை; ஒரு தண்டோரா வாசிப்பவரின் நிலை இதுதான்.

EZHILARASAN D

தோல் பதனிடும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 2 தீயணைப்பு வீரர்கள் காயம்

G SaravanaKumar

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்

Halley Karthik