முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆன்லைனில் ஆர்டர் செய்பவரா ? காத்திருக்கிறது புது சிக்கல்

தமிழகத்தில் டூ வீலர்களை கமர்சியல் பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதியில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு ஆர்டிஒ அலுவலகம் பதில் அளித்துள்ளது. இதனால் ஓலோ, ராபிடோ மற்றும் சோமேட்டோ, சூகி போன்ற நிறுவனங்களின் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனத்தெரிகிறது.

இண்டர்நெட் பயன்பாடு மூலம் உலகமே நம் உள்ளங்கைகளுக்கு வந்துவிட்டது. நாம் எங்கிருந்தாலும், எந்த பொருளையும் வாங்க நேரடியாக கடைகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. ஆன்லைனில் ஆர்டர் செய்தால் இல்லம் தேடி சேவை அளிக்க பல்வேறு நிறுவனங்கள் தயாராகவுள்ளன. இவற்றில் பல்வேறு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளையும் அள்ளி வழங்குகின்றன. முன்பெல்லாம் ஆடிக்கு மட்டுமே தள்ளுபடி, இப்போதோ ஆன்லைன் யுகத்தில் எதற்கெடுத்தாலும் தள்ளுபடிகள் வாரி வழங்கப்படுகின்றன. இது ஒரு புறம் இருக்க, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மட்டும் வாடகைக்கு விடப்பட்டன. இப்போது நம்மை வீட்டில் இருந்து அலுவலகத்திற்கோ, வேறு எங்கோ அழைத்துச் செல்ல டூ வீலர் டாக்ஸி சேவையும் வந்துவிட்டன. இந்த டூ வீலர் டாக்ஸி நாம் பயணம் செய்ய மட்டுமல்ல. நமக்கு தேவையான உணவுகளை சுடச்சுட வீட்டிற்கு எடுத்து வரவும் பயன்படுகின்றன. இப்படி டூ வீலர் மூலம் அளிக்கப்படும் சர்வீஸ்களுக்கு உரிய அனுமதி உள்ளதா என்ற கேள்விக்கு நம்மில் பலருக்கு பதில் தெரியாது.

இதுதொடர்பாக சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த காட்வின் என்பவர் தகவல் அறியும் சட்டம் மூலம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம், தமிழ்நாட்டில் மோட்டார் சைக்கிள்களை கமர்சியல் பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதியில்லை எனக்கூறியுள்ளார். கமர்சியல் சேவைகளுக்கு வாடகைக்கு விடுவதற்கும் அனுமதியில்லை. மோட்டார் சைக்கிள்களை கமர்சியல் சேவைகளுக்கு பயன்படுத்தவும் அனுமதியில்லை எனக்கூறியுள்ளார்.

உபர், சூகி, சோமேட்டோ, சிப்டோ போன்ற சேவைகளுக்கு மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்த எத்தனை வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, இதற்கு எங்களிடம் நீங்கள் கேட்கும் தகவல் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மோட்டார் சைக்களில் பயணிகளை ஏற்றிச் செல்லவும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என அந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலாக கிடைத்துள்ளது.

இதன்மூலம்  அரசின் அனுமதியில்லாமல், மேற்கண்ட நிறுவனங்கள் டூ வீலரில் சேவை அளித்து வந்துள்ளது தெரிய வருகிறது. இதனால் எதிர்காலத்தில் சூகி, சோமேட்டோ, ஓலோ போன்றவற்றின் சேவைகளுக்கு சிக்கல் ஏற்படலாம். மக்களும் உணவகங்களுக்கு நேரில் சென்று தேவையானவற்றை வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் எனத் தெரிகிறது.

இராமானுஜம்.கி

Advertisement:
SHARE

Related posts

பெண்கள் அனைவரும் அதிமுக ஆட்சி மீது கோபத்தில் உள்ளனர்: திமுக எம்.பி கனிமொழி குற்றச்சாட்டு!

Saravana

“வணிகர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கே ஆதரவு” – விக்கிரமராஜா

Niruban Chakkaaravarthi

சமூக இடைவெளியை மறந்து மீன்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்

Gayathri Venkatesan