முக்கியச் செய்திகள் உலகம்

பெண்கள் முகத்தை மறைக்கவில்லை எனில் சிறை

பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகும் போது உடலை முழுமையாக மறைக்க வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். 

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியப் பிறகு பெண்களுக்கு கடுமையான விதிகளை விதித்து வருகிறது. இந்நிலையில், பொது இடங்களில் வரும் பெண்கள் தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைத்தபடி பர்தா அணிய வேண்டும் என்று தலிபான் அதிரடி கட்டளையை விதித்துள்ளது.

இதுகுறித்து தலிபானின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா பிறப்பிட்ட ஆணையில், பெண்கள் அனைவரும் தலை முதல் கால் வரை மறைக்கும் பர்தாவை பொது இடங்களில் அணிய வேண்டும். அது பாரம்பரியமானது மற்றும் மரியாதைக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாலிபர்களை சந்திக்கும்போது  ஷரியா உத்தரவுகளின்படி, மிகவும் வயதான அல்லது இளைமையாக இல்லாத பெண்கள் கண்களைத் தவிர முகத்தை மறைக்க வேண்டும். பெண்களுக்கு வெளியில் முக்கியமான வேலை இல்லை என்றால் வீட்டிலேயே இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஒரு பெண் வீட்டிற்கு வெளியே ஆண்களை சந்திக்கும் பொழுது உடலை முழுவதுமாக மறைக்கவில்லை என்றால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது அரசாங்க வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்?

Gayathri Venkatesan

உலகின் மிகப்பெரிய தேனீ; ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

Jayapriya

‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

Saravana Kumar